Categories
மாநில செய்திகள்

கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாட்டம்… அலையில் மூழ்கி மாயமான மாணவர்… தேடும் பணி தீவிரம்…!!

நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவர் கடல் அலையில் மூழ்கி மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்திலுள்ள தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பாலாஜிக்கு பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 7 பேருடன் தவளக்குப்பத்தை அடுத்துள்ள புதுக்குப்பம் கடற்பகுதிக்கு பாலாஜி சென்றுள்ளார் . அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய பின் பாலாஜியும் அவனது நண்பர்களும் ஆறும் கடலும் இணையும் கழிமுக பகுதியில் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது திடீரென்று எழுந்த பேரலை  பாலாஜி மற்றும் அவரது நண்பர் புவியரசனை  சுருட்டிக்கொண்டு கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள் கூச்சலிட்டனர். மாணவர்களின் சத்தம் கேட்டு மீனவர்கள் ஓடிவந்து கடலுக்குள் மாயமான 2 மாணவர்களையும் தேடினர். இதில் பாலாஜி  உயிருடன் மீட்கப்பட்டான். மேலும்  மீட்கப்பட்ட  பாலாஜிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான  புவியரசனை தேடும் பணி உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம்  குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |