Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சட்டவிரோதமான செயல்… கரெக்டா கண்டுபிடித்த போலீசார்…!!

சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் தேவனூரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை அருகில் கள் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக சான்றோர் தோப்பு கிராமத்தில் வசித்து வரும் மூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடமிருந்த கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |