புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது காட்டுப்பகுதியில் பேரல்கள் மற்றும் குடங்களில் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி, தாளக்கொல்லை, முனியன் கோவில் மற்றும் காவக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காட்டுப்பகுதியிலுள்ள புதர் மறைவில் 4 பேரல்கள் மற்றும் 5 குடங்களிலிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் அவற்றை தரையில் ஊற்றி அழித்துள்ளனர்.
இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறல் வைத்தவர்களை தேடி வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் மதுவிலக்கு காவல் துறையினர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.