Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது கந்தர்வகோட்டை பகுதியில் பேரல்களில் சாராயஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கல்லுப்பட்டி கிராமத்திலிருக்கும் அணைக்கட்டு வாரி பகுதியில் பேரல்களில் 250 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து பேரல்களிலிருந்த சாராயஊறலை கீழே ஊற்றி அழித்துள்ளனர்.

மேலும் சாராயஊறல் காய்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தளவாட சாமான்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |