சட்டவிரோதமாக சாராயம் கடத்தி விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்து விட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கங்கனாகுப்பம் பகுதியில் அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சாராயம் கடத்தியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயம் கடத்திய குற்றத்திற்காக கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விட்டனர்.
இதனை தொடர்ந்து புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் பாஸ்கர் மற்றும் சரவணன் ஆகிய இருவரை சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 65 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.