Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கைப்பையில் மறைத்த பொருள்… வசமாக சிக்கிய நால்வர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் ரயிலில் சென்ற பயணிகளிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த 4 பயணிகளிடம் உள்ள கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 199 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த 4 பேரும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை தெருவில் வசித்து வரும் ஆகாஷ், சிவா, முரளி மற்றும் மதன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு, 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |