மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓசூர் நோக்கி வேகமாக சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 288 கர்நாடக மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக சந்துரு மற்றும் சல்மான் என்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் கடத்தி சென்ற மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.