75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரி சாராயத்தை லாரியில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஞானோதயம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அதில் 573 கேன்களில் மொத்தம் 20 ஆயிரத்து 55 லிட்டர் எரி சாராயம் இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இக்ரம் என்பதும், அங்கிருந்து புதுச்சேரிக்கு எரிசாராயத்தை கடத்த முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் லாரி ஓட்டுனரை கைது செய்ததோடு, அவர் கடத்திய 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் மற்றும் லாரியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.