கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மதுவிலக்கு காவல்துறையினர் ஓசூர் ஜூஜூவாடி மற்றும் சுங்க சாவடி போன்ற பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வந்த சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த குற்றத்துக்காக காவல்துறையினர் மூவேந்தன், முனிராஜ், மருதுபாண்டியன், அன்பரசன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 342 கர்நாடக மது பாட்டில்கள் மற்றும் இரண்டு சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.