ஆட்டோவில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணன்டஅள்ளி பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் ஆட்டோ டிரைவர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பதும், ஆட்டோவில் 250 கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக ஆட்டோ டிரைவர் சதீஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 250 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.