துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறி பாஸ் வாங்கிய ஒருவர் சாராயம் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கொத்தாம்பாடி பகுதியில் சட்டவிரோதமாக காரில் சாராயம் கடத்தப்படுவதாக ஆத்தூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சாதாரண உடையில் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.
ஆனாலும் நிற்காமல் சென்ற அந்த காரை காவல்துறையினர் துரத்தி பிடித்தனர். அதன் பின் காரில் சென்றவரிடம் விசாரணை நடத்திய போது, அந்த நபர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு காரில் செல்வதாக கூறி இ-பாஸ் வாங்கி விட்டு, சாராயம் கடத்தியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.