Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும் போலீஸ் தான்” வாக்குவாதம் செய்த நபர்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

காவல் அதிகாரி 4 பேருடன் இணைந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் காவல் துறையினர் மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் அவ்வழியாக சென்றுள்ளது. இதனை பார்த்ததும் காவல்துறையினர் அந்த காரை நிறுத்தி அதில் வந்த 4 பேரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த காரில் இருந்த ஒருவர் நான் போலீஸ் எனவும், எம்.கே.பி நகர் சரக உளவுத்துறை சப்-இன்ஸ்பெக்டரை எனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த நபர் என்னை விடுங்கள் என்று காவல்துறையினரிடம் அடிக்கடி கூறியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த காரில் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வாக்குவாதம் செய்த நபர் கொடுங்கையூர் பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் புழல் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் 4 பேரும் மதுபாட்டில்களை ஆந்திர மாநிலத்தில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து கொடுங்கையூர் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் பிரபாகரன் மற்றும் அவருடன் இருந்த கார்த்திக், வெங்கடேசன், ராஜ்குமார் என மொத்தம் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 250 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |