Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள மறைச்சு வச்சிருக்காங்க… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

காய்கறி மூட்டைக்குள் மறைத்து வைத்து மது பாட்டில்கள் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறி மூட்டைக்குள் 18 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் நிலோபர், சிராஜூதீன் என்ற இரண்டு வாலிபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |