சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தங்களாச்சேரி பகுதியில் நாகையாபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் இதனை சின்னசாமி மற்றும் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.