Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. தோட்டத்தில் பதுக்கிய பொருள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சட்ட விரோதமாக 4000 மது பாட்டில்கள் பதுக்கி வைத்தவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு லாரன்ஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தோட்டத்து அறையில் அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 4000 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் லாரன்சை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |