Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… சோதனையில் சிக்கிய பொருள்… கைது செய்த காவல்துறையினர்…!!

வெளிமாநில மது பாட்டில்களை கடத்திய லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 915 வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மங்களாபட்டி பகுதியில் வசிக்கும் ராஜகோபால் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜகோபாலை கைது செய்ததோடு, அவர் கடத்திய 915 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |