ஆம்புலன்சில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரலிங்கம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்டவிரோதமாக ஆம்புலன்சில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உரிமையாளரான ராஜ்குமார் மற்றும் ஓட்டுநர் தேவராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 65 மது பாட்டில்கள் மற்றும் ஆம்புலன்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.