Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு குடோனில் இறக்கி வைக்கப்பட்ட அரிசி…. சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி…. மடக்கி பிடித்த காவல்துறை….!!

குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். அதே சமயத்தில் லாரி வாடகைக்கு செல்லும்போது இவரே டிரைவராகவும் செல்வது வழக்கமான ஒன்று. அதன்படி சம்பவம் நடந்த அன்று அரிசியை ஏற்றுக் கொண்டு வந்து அரசு அரிசி குடோனில் இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மது அருந்தி உள்ளார்.

அதன்பின் அவர் மது போதையுடன் லாரியை சாலையில் தாறுமாறாக ஓட்டியுள்ளார். இதனால் ரோட்டில் வந்த மினிவேன், இருசக்கர வாகனம் போன்றவற்றின் மீது மோதி தள்ளி விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி மடக்கிப்பிடித்து டிரைவர் பாண்டியை கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |