முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு மது பிரியர்கள் மதுவினை வாங்கி சென்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் 35 நாட்களுக்குப் பிறகு அரசின் உத்தரவின்படி திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடைகளின் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மது பிரியர்கள் முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு மதுவை வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பசுவந்தனை சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் ஏராளமான மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவினை வாங்கிச் சென்றுள்ளனர்.