Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நல்லது சொன்னா குத்தமா…? போதை வாலிபரின் வாக்குவாதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மது போதையில் வாலிபர் முக கவசம் அணியாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் ரோடு சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அலசநத்தம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மதுபோதையில் இருந்த அந்த வாலிபர் சரியாக முககவசம் அணியாததால் காவல்துறையினர் அவரை கண்டித்துள்ளனர். அப்போது முக கவசத்தை அணிய மறுத்து அந்த வாலிபர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |