Categories
மாநில செய்திகள்

“மதுப்பழக்கம் உள்ள காவலர்களைக் கண்டறிய வேண்டும்”…. கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை…!!

நாட்டறம்பள்ளி அருகே வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வசூல் செய்த போலி சப்-இன்ஸ்பெக்டரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அனைவரும் காவல் நிலையங்களில், மது பழக்கம் உள்ள காவலர்களை கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மக்கள் பற்றி மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களை  நேரடியாக அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களுக்கு காவலர்கள் நேரடியாக சென்று குற்றச்செயல்களை முன்னாடியே கண்டறிந்து தடுக்க வேண்டும்.

கள்ளச்சாராயம், லாட்டரி, சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களில் ஒவ்வொரு காவல் நிலையங்களில் குற்றங்கள் இல்லாத சூழ்நிலை உருவாக வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மதுப்பழக்கம் உள்ளவர்களை கண்டறிந்து மது அருந்துவோர் மறுவாழ்வு மையம் அறிவுரைகளை பெற்று மது பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். பண்டிகைகள் போராட்டங்களின் போது அளவான காவலர்களை பணியமர்த்தி அவர்களின் பணிச்சுமையை குறைக்க, அதிக தளவாடங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று கூடுதல் டிஜிபி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |