சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வழுதியூர் பகுதியில் தங்கராசு என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தங்கராசு தனக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கராசுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.