Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கட்சியில் இருந்துட்டு இப்படி பண்ணலாமா….? காரிலேயே கடத்தல்… அமமுக பிரமுகர் கைது….!!

காரில் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த அமமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகை மாவட்டத்திலுள்ள கங்களாஞ்சேரி ரயில்வே கேட் பகுதியில் மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு காரை ஓட்டியவரிடம் விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர் அமமுக வைச் சேர்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சர்புதீன் என்பது தெரியவந்தது.

சர்புதீன் திருவாரூர் மாவட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை காரில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சர்புதீனை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள சாராயக் பாக்கெட்டுகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |