மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் உடையாற்பாளையத்தை சேர்ந்த குமார், பிளிச்சிகுலி கிராமத்தைச் சார்ந்த ரெங்கநாதன், இடையாரை சார்ந்த ஷங்கர், ஆகிய மூன்று பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.