Categories
மாநில செய்திகள்

“மது விருந்து, பைக் ரேஸ், நட்சத்திர விடுதிகள்”…. நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிரடி கட்டுப்பாடுகள்….!!!!!

தமிழகத்தில் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டம் இன்று நள்ளிரவு தொடங்கப்படும் நிலையில், காவல்துறையினரும் அரசாங்கமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா பரவலின் காரணமாக சென்னையில் கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புத்தாண்டு பண்டிகையின் போது ஏராளமான இளைஞர்கள் மது அருந்திவிட்டு சாலையில் பைக் ரேஸில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பிரதீப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று இரவு 7 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு சாலைகளில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி போன்ற முக்கிய சாலைகளில் வாலிபர்கள் பைக் ரேஸ் செல்லக்கூடாது. அதன் பிறகு மாவட்டத்திலுள்ள சுமார் 180-க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் தேவாலயங்களிலும் ரோந்து பணிகள் தீவிர படுத்தப்படும். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்காக 1 எஸ்பி, 1 ஏடிஎஸ்பி, 21 இன்ஸ்பெக்டர், 930 காவலர்கள் என மொத்தமாக 960 காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

புத்தாண்டு பண்டிகையின் போது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் பீச் ரிசார்ட் உணவகங்களில் 1.1.2023 அன்று இரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதோடு பொதுமக்களுக்கு ஆபத்து மற்றும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பட்டாசுகள் வெடிக்க கூடாது. மேலும் மது அருந்திவிட்டு யாராவது வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

 

Categories

Tech |