சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சாப்பிடூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராமன் மற்றும் பாலகுருநாதன் ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை கண்டதும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல் கீழவளவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது செம்மணிபடி பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ஜெயக்குமார் மற்றும் சித்தநாதன் என்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 70 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.