சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் மதுபானம் ஏற்றி செல்லும் வாகனத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வருபவர்களான பாலசந்தர், முத்துப்பாண்டி ஆகியோரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 37 மது பாட்டில்கள் மற்றும் 10000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.