கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக மது விளக்கு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவனியாபுரம் பகுதியில் கள் விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் ஜே.பி நகர் பகுதியில் வசிக்கும் செல்வகுரு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 20 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.