Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமாய் செய்த வேலை… ரோந்து பணியில் சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறை…!!

மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி காவல் நிலையத்திற்கு முள்ளங்குறிச்சி பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் முள்ளங்குறிச்சி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் பாண்டியன் மற்றும் சரவணன்ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |