Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாய் செய்த செயல்… ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்… கைது செய்த காவல்துறை…!!

மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் தளவாப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பஸ் நிலையம் அருகில் ஒருவர் மது விற்று கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் அவர் காந்தி நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதியில் அடிக்கடி நிகழ்வதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |