மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் காவல்துறையினர் டி.கல்லுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் என்.முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று செல்வராஜை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.