மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் சின்னழகி வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 71 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.