Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் வைத்து காய்ச்சிய சாராயம்…. தகவலறிந்த காவல்துறையினர்…. கணவன் மனைவிக்கு கிடைத்த தண்டனை….!!

சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக கணவன் மனைவி இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள சாப்டூர் காவல் துறையினருக்கு அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதி முழுவதும் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அங்குள்ள தோட்டத்தின் உரிமையாளர் செல்வம் மற்றும் அவருடைய மனைவி செல்வி இருவரும் சாராயம் காய்ச்சி வைத்திருந்தனர். இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்து சாராயத்தை கீழே கொட்டி அழித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |