மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரம் சுந்தராபுரம் பகுதியில் மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஹரிஹரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல் குளித்தலையில் உள்ள அய்யலூர் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை காவல்துறையினர் கண்டுள்ளனர்.
இதனையடுத்து சுப்பிரமணியன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மது விற்பனை செய்து கொண்டிருந்த கதிர், சண்முகம், மகேந்திரன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.