சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 960 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செல்வநாயகபுரம் தொகுதியில் தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சில வாலிபர்கள் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் செல்வம், விஜய் பொன்னுசாமி போன்ற 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 960 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.