Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சிதான் விக்குறாங்க… வசமாக சிக்கிய வாலிபர்கள்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 960 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் காய்கறி மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ரவிக்குமார், வைகுண்டம் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 419 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |