Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொடரும் சாராய விற்பனை… அனைத்தையும் கீழே கொட்டி அழித்த போலீசார்… தீவிர சோதனை…!!

விருதுநகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் சாராயத்தையும் கீழே கொட்டி அழித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அடுத்துள்ள வெம்பக்கோட்டை பகுதியில் ரஞ்சித்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து வெம்பக்கோட்டை வடக்குத் தெருவில் ரஞ்சித்குமார் சாராயம் காய்ச்சி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் ரஞ்சித்குமாரை கைது செய்த போலீசார் சாராய பேரலையும் கீழே கொட்டியுள்ளனர்.

Categories

Tech |