சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோரைக்குழி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அம்பிகா வீட்டின் பின்புறத்தில் மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அம்பிகாவை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோல் விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள வீடுகளில் காவல்துறையினர் சோதனை செய்தபோது முத்துலட்சுமி என்பவருடைய வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முத்துலட்சுமியை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.