மது மற்றும் சாராய பாட்டில்களை கடத்திய இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இருசக்கரவாகனத்தில் மூட்டைகளுடன் வந்த ஒரு நபரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த மூட்டைகளில் மது மற்றும் சாராய பாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 5000 மதிப்புள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோல் காரைக்கால் பேருந்து நிலையத்தில் சீர்காழி பஸ் ஏறுவதற்காக குமுதவல்லி என்ற பெண் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த பெண்ணிடம் இருந்த பையில் சோதனை செய்தபோது அதில் ரூபாய் 4 ஆயிரம் மதிப்பிலான மது மற்றும் சாராய பாட்டில்கள் என்பது தெரியவந்துள்ளது. உடனே காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 4000 மதிப்பிலான மது மற்றும் சாராய பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.