ஹோட்டலில் அனுமதியின்றி மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள கத்தேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த ஹோட்டலுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஹோட்டலில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஹோட்டலில் மது விற்பனை செய்த விக்னேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 74 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.