போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 263 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதோடு, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி தலைமையில் அமலாக்க பிரிவு போலீசார் முனுசாமி நகர், சிப்காட் தொழிற்பேட்டை, எளாவூர், கும்முடிபூண்டி தாமரை ஏரி, டாஸ்மாக் கடை போன்ற இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பல பேர் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக கும்மிடிபூண்டி காட்டுக்கொல்லை தெருவில் வசித்துவரும் ஆனந்த், ஜெயபால், நற்குணன், ராஜேந்திரன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 263 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.