Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. வசமாக சிக்கிய இருவர்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி காவல்துறையினருக்கு பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசித்து வரும் காந்தி என்பதும், மற்றொருவர் வையாபுரி என்பதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை அறிந்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |