Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காலம் மாறி போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா…. கைது செய்த காவல்துறை…!!

சட்ட விரோத சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருப்போரூர் தாலுகாவிற்கு உட்பட்ட மானாமதி திருநிலை கிராமம் மற்றும் கொண்டங்கி போன்ற பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு ஒரு பெண் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது அந்த பெண் அதே பகுதியில் வசித்து வரும் சுதா என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 14 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று திருநிலை கிராமத்தில் மது விற்ற குற்றத்திற்காக பார்வதி என்பவரையும், கொண்டங்கி கிராமத்தில் மது விற்ற குற்றத்திற்காக யுவராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |