சட்ட விரோதமாக சாராயம் கடத்தி விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ராதா மங்கலம், எரும்புகன்னி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் புருஷோத்தமன் மற்றும் முருகேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் சட்டவிரோதமாக சாராயம் கடத்தி வந்து அப்பகுதியில் விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் முருகேசன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.