கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் கோவங்காடு பகுதியில் வசிக்கும் கணேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர் அப்பகுதியில் அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.