மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை காவல் துறையினருக்கு குமாரலிங்கம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த ஒரு பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மது விற்பனை செய்த குற்றத்திற்காக சுரேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.