Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதில் கலந்த மாத்திரைகள்… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சாராயத்தில் போதை மாத்திரைகளை கலந்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆண்டிமடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அந்த நபர் அதே பகுதியில் வசிக்கும் ரகுபதி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் போதை மாத்திரைகளை கலந்து சாராயம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் ரகுபதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராயம் மற்றும் 80 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்த அழித்துவிட்டனர்.

Categories

Tech |