சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் நாராயணசாமி என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து நாராயணசாமியின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்த போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்துள்ளது. அதன்பின் நாராயணசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.