சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் குலசேகரபட்டினம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜசேகர் என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் மது விற்பனை செய்த குற்றத்திற்காக ராஜசேகரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.