தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 9 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 16 லிட்டர் கள், 69 மதுபாட்டில்கள், 4000 ரூபாய் ரொக்கம் போன்றவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.